மாவட்ட செய்திகள்

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் திருத்த பட்டியல் வெளியீடு 18 வயது பூர்த்தியான 60 ஆயிரம் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு + "||" + In Chennai Issue of Voter Amendment List for 16 Assembly constituencies

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் திருத்த பட்டியல் வெளியீடு 18 வயது பூர்த்தியான 60 ஆயிரம் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு

சென்னையில் உள்ள  16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் திருத்த பட்டியல் வெளியீடு  18 வயது பூர்த்தியான 60 ஆயிரம் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டார். இதில் 18 வயது பூர்த்தியான 60 ஆயிரம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை, 

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாநகராட்சியில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான 2020-ம் ஆண்டு வாக்காளர் பட்டியல்கள் தயார் செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த பணி தற்போது முடிவடைந்துள்ளது.

இந்தநிலையில் சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர் நேற்று ரிப்பன் மாளிகையில் அ.தி.மு.க முன்னாள் எம்.பி. வெங்கடேஷ் பாபு, தி.மு.க பகுதி செயலாளர் எஸ்.மதன் மோகன், தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் தாமோதரன், தமிழக பா.ஜ.க நிர்வாகி ஜெய்சங்கர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 2020-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.

இதையடுத்து கமிஷனர் கோ.பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை திருத்தி வெளியிடுவது வழக்கம். இதில் வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தியடைந்தவர்களின் பெயர்களை சேர்த்தல், இறந்தவர்களின் பெயர்களை நீக்குதல் தொடர்பான திருத்தங்கள் மேற்கொண்டு புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

திருத்த பணிகள்

இந்த திருத்த பணிகளுக்கு முன்னர் சென்னை மாநகராட்சியில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 38 லட்சத்து 88 ஆயிரத்து 673 வாக்காளர்களாக இருந்தது. பின்னர் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யும் கால கட்டத்தில் 65 ஆயிரத்து 215 சேர்த்தல் விண்ணப்பங்களும், 3 ஆயிரத்து 384 பெயர் நீக்கம் விண்ணப்பங்களும், 14 ஆயிரத்து 155 திருத்த விண்ணப்பங்களும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. மொத்தமாக 82 ஆயிரத்து 754 மணுக்கள் பெறப்பட்டது.

இந்த திருத்த பணிகளுக்கு பிறகு 59 ஆயிரத்து 905 பெயர் சேர்த்தல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1,786 பெயர் நீக்கம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 9 ஆயிரத்து 809 பிழை திருத்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு மொத்தம் 71 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

1.46 சதவீதம் அதிகம்

இதனால் தற்போது 16 சட்டமன்ற தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 39 லட்சத்து 46 ஆயிரத்து 792 ஆக மாறியுள்ளது. இது முன்பு இருந்த வாக்காளர் பட்டியலை காட்டிலும் 1.46 சதவீதம் அதிகம் ஆகும். 18 வயது பூர்த்தி அடைந்த சுமார் 60 ஆயிரம் புதிய வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

சிறிய-பெரிய தொகுதிகள்

இதில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 337 வாக்காளர்களுடன் குறைந்த வாக்காளர் எண்ணிக்கை கொண்ட தொகுதியாக துறைமுகம் சட்ட சட்டமன்ற தொகுதி விளங்குகிறது. இதேபோல் 3 லட்சத்து 6 ஆயிரத்து 347 வாக்காளர்களுடன் அதிக வாக்காளர் எண்ணிக்கை கொண்ட தொகுதியாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடும் போது துணை கமிஷனர் பி.குமாரவேல் பாண்டியன் உள்ளிட்ட பல அதிகாரிகள் உடன் இருந்தனர்.