கொடைக்கானலில் பிளம்ஸ் பழங்கள் விற்பனை
கொடைக்கானல் என்றவுடன் அனைவரின் நினைவுக்கு வருவது இங்கு விளையும் பிளம்ஸ் பழங்கள் தான். இவை ஆண்டுக்கு 2 முறை காய்க்கும் தன்மை உடையது.
கொடைக்கானல்,
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் முதல் வாரம் வரை இதன் முழு சீசன் காலம் ஆகும். இருப்பினும் ஜனவரி முதல் பிப்ரவரி மாதம் வரையிலான கோடைகாலத்தில் பிளம்ஸ் பழங்கள் குறைவாக விளைகின்றன.
அதன்படி தற்போது கோடைகால பிளம்ஸ் பழங்கள் கொடைக்கானலில் விற்பனைக்கு வந்துள்ளன. இவை மொத்த விலையில் கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது. சில்லறை விலையில் ரூ.180 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.
விலை உயர்வு காரணமாக பெரும்பாலான சுற்றுலா பயணிகள், பிளம்ஸ் பழங்களை வாங்காமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இதற்கிடையே கோடைகாலத்தில் விளையும் பிளம்ஸ் பழங்கள் ருசி குறைந்து காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story