கூடங்குளம் அணுஉலையில் மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியது


கூடங்குளம் அணுஉலையில் மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியது
x
தினத்தந்தி 16 Feb 2020 3:00 AM IST (Updated: 15 Feb 2020 8:25 PM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் முதலாவது அணுஉலையில் பழுது சரி செய்யப்பட்டு மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

வள்ளியூர், 

கூடங்குளம் முதலாவது அணுஉலையில் பழுது சரி செய்யப்பட்டு மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

தொழில்நுட்ப கோளாறு 

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 2 அணு உலைகளிலும் மின்உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் 2–வது அணு உலை கடந்த டிசம்பர் மாதம் 14–ந்தேதி பராமரிப்பு பணிக்காக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

முதலாவது அணு உலையில் 980 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் கடந்த 12–ந்தேதி காலை 7.22 மணியளவில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2 அணு உலைகளும் மின் உற்பத்தி நடைபெறாததால் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு அடைந்தது.

மின்உற்பத்தி தொடங்கியது 

இந்நிலையில் முதலாவது அணு உலையில் ஏற்பட்ட பழுதை விஞ்ஞானிகள் சரிசெய்து நேற்று மாலை 3.08 மணியளவில் மீண்டும் மின் உற்பத்தியை தொடங்கினர். தற்போது 250 மெகாவாட் மின்உற்பத்தி நடந்து வரும் நிலையில் படிப்படியாக மின்உற்பத்தி அளவு அதிகரிக்கப்பட்டு முழு உற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை இன்னும் ஓரிரு நாட்களில் அடையும் என அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்துள்ளது.


Next Story