அரசு ஆஸ்பத்திரியில் வசந்தகுமார் எம்.பி. ஆய்வு
கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் வசந்தகுமார் எம்.பி. திடீரென ஆய்வு செய்தார். அப்போது அவர் புற நோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, தண்ணீர் வசதி போன்றவற்றை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் என தினமும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு சரிசெய்ய வேண்டிய சில குறைபாடுகள் உள்ளது. குறிப்பாக தண்ணீர் தொட்டி இருந்தும் மின்மோட்டார் வசதி இல்லாததால் போதிய தண்ணீர் கிடைக்கவில்லை.
இரவுநேர டாக்டர் பணியில் முழுநேரமும் இருந்தால் நோயாளிகள் அதிகம் பேர் சிகிச்சை பெறவசதியாக இருக்கும். ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள புல்பூண்டுகளை அகற்றி நிரந்தரமாக ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.
இதுதொடர்பாக மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர், அல்லது மாநில மருத்துவ செயலாளரை நேரில் சந்தித்து மனு அளிக்கவுள்ளேன். இந்த ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தப்பட்ட ஆஸ்பத்திரியாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது கன்னியாகுமரி நகர காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன், டாக்டர் ஜெனிட்டா உள்பட பலர் இருந்தனர்.
Related Tags :
Next Story