நெல்லை அருகே மணல் கடத்தலை தடுத்த சப்–இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி 2 டிரைவர்கள் கைது
நெல்லை அருகே மணல் கடத்தலை தடுத்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற 2 டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை,
நெல்லை அருகே மணல் கடத்தலை தடுத்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற 2 டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொலை முயற்சி
பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மகேந்திரன். இவர் நேற்று முன்தினம் இரவு போலீசாருடன் சேர்ந்து மணல் கடத்தலை தடுக்க வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கே.டி.சி. நகர் விரிவாக்க பகுதியில் நின்று கொண்டிருந்த போது, அந்த வழியாக 2 லாரிகள் வந்தன. அதனை சப்–இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தடுத்து நிறுத்த முயற்சி செய்த போது லாரிகள் அவர் மீது மோதுவது போல் வந்தது. இதைக்கண்ட அவர் சற்று விலகி தப்பினார்.
இதையடுத்து போலீசார் 2 லாரிகளையும் மடக்கிப்பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அதில் மணல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரிகலை ஓட்டி வந்த டிரைவர்கள் 2 பேரிடமும் விசாரித்த போது, அவர்கள் சீவலப்பேரியை சேர்நத் இசக்கி பாண்டி (வயது 27) மற்றும் ராஜவல்லிபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து (26) என்பதும், கலியாவூர் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் மணலை திருடி கடத்தி வந்ததும் தெரியவந்தது.
2 டிரைவர்கள் கைது
இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரைவர்கள் 2 பேரையும் கைது செய்து, மணலுடன் லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story