மாவட்ட செய்திகள்

ராணிப்பேட்டையில் த.மு.மு.க.வினர் சாலை மறியல் + "||" + Tmmk road picket at Ranipet

ராணிப்பேட்டையில் த.மு.மு.க.வினர் சாலை மறியல்

ராணிப்பேட்டையில் த.மு.மு.க.வினர் சாலை மறியல்
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய த.மு.மு.க.வினர் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
சிப்காட் (ராணிப்பேட்டை), 

த.மு.மு.க.வினர்  இதனை கண்டித்து நேற்று முன்தினம் இரவு ராணிப்பேட்டை முத்துக்கடையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் முகம்மது ஹசன் தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்டவர்கள், தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதில் மாவட்ட துணைத்தலைவர் ராஜாமுகம்மது, ராணிப்பேட்டை நகர தலைவர் அஸ்மத், நகர செயலாளர் கரிமுல்லா, மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் சுலைமான், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நியாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாலம் கட்டாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
பாலம் கட்டாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
2. அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
கறம்பக்குடி அருகே வகுப்புகளை புறக்கணித்து அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3. பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
ஜோலார்பேட்டை அருகே சீரான குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் அரசு பஸ்களை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4. தஞ்சையில், பெண்கள் சாலை மறியல்; 131 பேர் கைது
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க கோரி தஞ்சையில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 131 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. விவசாயி மர்ம சாவு ; உறவினர்கள் சாலை மறியல்
தர்மபுரி அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்தார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-