வாட்ஸ்-அப்பில் பதிவிட்டதால் சிக்கினார் சிறுத்தை நகங்களை வெட்டி எடுத்த வாலிபர் கைது விஷம் வைத்து கொன்ற மர்மநபருக்கு வலைவீச்சு
செத்துகிடந்த சிறுத்தையின் நகங்களை வெட்டி எடுத்த வாலிபர், அதனை படம்பிடித்து வாட்ஸ்-அப்பில் பதிவிட்டதால் வனத்துறையினரிடம் சிக்கினார். மேலும் விஷம் வைத்து கொன்ற மர்மநபரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிக்கமகளூரு,
சித்ரதுர்கா மாவட்டம் மொலகால்மூரு தாலுகாவில் பாலக்கெரே குட்டா வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் கடந்த 12-ந்தேதி சிறுத்தை ஒன்று செத்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மொலகால்மூரு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது செத்து கிடந்த சிறுத்தையின் கால்கள் துண்டிக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து சிறுத்தையின் உடலை வனத்துறையின் கால்நடை மருத்துவர் பிரேதப் பரிசோதனை செய்தனர். பின்னர் சிறுத்தையின் உடல் அதே பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.
இந்த நிலையில் சிறுத்தையின் பிரேதப் பரிசோதனை வனத்துறையினரிடம், கால்நடை மருத்துவர் வழங்கினார். அதில், சிறுத்தை விஷம் வைத்து கொல்லப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மொலகால்மூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இதற்கிடையே மொலகால்மூரு டவுனில் சீனிவாசபடாவனே பகுதியை சேர்ந்த பவன் (வயது 20) என்ற வாலிபர், சிறுத்தை நகங்களை தனது செல்போனில் படம் பிடித்து வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் பதிவிட்டு இருந்தார்.
இது சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர், பவனை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், பவன் ஆடுமேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று வனப்பகுதிக்குள் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்ற பவன், சிறுத்தை செத்து கிடந்ததை பார்த்துள்ளார்.
இதையடுத்து அவர் சிறுத்தையின் 2 கால்களை வெட்டி அதன் நகங்களை எடுத்து வந்ததும், அதனை தனது நண்பர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் போட்டதும், இதனால் அவர் வனத்துறையினரிடம் சிக்கியதும் தெரியவந்தது.
இதைதொடர்ந்து பவனை வனத்துறையினர் கைது செய்ததுடன், சிறுத்தையின் 2 கால் நகங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் சிறுத்தையை விஷம் வைத்து கொன்றது யார் என்பது பற்றி வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story