குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு சென்னையில் நடந்த போலீஸ் தடியடியை கண்டித்து தமிழகம், புதுச்சேரியில் போராட்டம்
சென்னையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து நேற்று தமிழகம், புதுச்சேரியில் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி,
சென்னை நகரில் தெருக்கள், சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் போலீசார் அனுமதி இன்றி ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி, உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்தக்கூடாது என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கடந்த 13-ந் தேதி இரவு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவு வருகிற 28-ந் தேதி வரை 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் போலீசாரின் உத்தரவை மீறி சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது கல்வீச்சு சம்பவமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள்.
இந்த சம்பவம் பற்றிய தகவல் பரவியதும் தாம்பரம், ஆலந்தூர், புதுப்பேட்டை, மாதவரம், செங்குன்றம், அமைந்தகரை, மண்ணடி உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை, திருச்சி, கோவை போன்ற ஊர்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் வண்ணாரப்பேட்டையில் அதே இடத்தில் முஸ்லிம்கள் நேற்று மீண்டும் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
சென்னையில் போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து திருச்சி, கோவை, தஞ்சை, புதுக்கோட்டை, நெல்லை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் புதுவை மறைமலையடிகள் சாலையில் உள்ள சுதேசி மில் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுச்சேரி மாவட்ட தலைவர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பாரூக் கண்டன உரையாற்றினார். இதில் பெண்கள், குழந்தைகள் ஏராளமானோர் கைகளில் தேசியக்கொடியை ஏந்தியபடி மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.
முடிவில் மாவட்ட துணை தலைவர் அபீப்ரகுமான் நன்றி கூறினார். வில்லியனூர் மெயின்ரோட்டில் அந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். இதில் வில்லியனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள், பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் புதிய பஸ் நிலைய நுழைவு வாயில் முன்பு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. அவர்களை உருளையன்பேட்டை போலீசார் சமாதானம் செய்தனர். காரைக்கால் பழைய ரெயில் நிலையத்தில் நேற்று 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Related Tags :
Next Story