நெல்லை அருகே டாஸ்மாக் கடையில் காவலாளியை தாக்கி மதுபாட்டில்கள் கொள்ளை
நெல்லை அருகே டாஸ்மாக் கடையில் காவலாளியை தாக்கி மதுபாட்டில்களை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்று விட்டனர்.
நெல்லை,
நெல்லை அருகே டாஸ்மாக் கடையில் காவலாளியை தாக்கி மதுபாட்டில்களை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்று விட்டனர்.
டாஸ்மாக் கடை
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டானை அடுத்த ஆலடிப்பட்டி ரெயில்வே கேட் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் டவுனை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இந்த கடைக்கு தாழையூத்து அருகே உள்ள செல்லம் நகரை சேர்ந்த சுந்தரம் (75) என்பவர் காவலாளியாகவும் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம்இரவு 10 மணிக்கு நவநீத கிருஷ்ணன் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றார்.
மதுபாட்டில்கள் கொள்ளை
பின்னர் காவலாளி சுந்தரம் மட்டும் அங்கு இரவு பணியில் இருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் சுந்தரத்தை தாக்கி கட்டிப்போட்டனர். பின்னர் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு அங்கு பணம் இல்லை என்பது தெரியவந்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையடுத்து விலை உயர்ந்த மதுபாட்டில்களை கொள்ளை அடித்துச் சென்று விட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும் என்று தெரிகிறது. மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story