பைந்தூரில், ஆழ்துளை கிணற்றில் 15 அடி ஆழத்தில் சிக்கி தவித்த தொழிலாளி - 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்பு


பைந்தூரில், ஆழ்துளை கிணற்றில் 15 அடி ஆழத்தில் சிக்கி தவித்த தொழிலாளி - 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 17 Feb 2020 4:24 AM IST (Updated: 17 Feb 2020 4:24 AM IST)
t-max-icont-min-icon

பைந்தூரில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 15 அடி ஆழத்தில் சிக்கி தவித்த தொழிலாளியை 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

மங்களூரு,

உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா உப்புந்தா கிராமம் ஜனதா காலனியை சேர்ந்தவர் சுப்பா கார்வி. இவருடைய மகன் ரோகித் கார்வி(வயது 35) கூலி தொழிலாளி. இந்த நிலையில் நேற்று காலை ரோகித், சக தொழிலா ளர்களுடன் மரவந்தே பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு திடீரென்று மண்சரிவு ஏற்பட்டதால் ேராகித் எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.

20 அடி ஆழமுள்ள அந்த ஆழ்துளை கிணற்றில் சுமார் 15 அடியில் ரோகித் சிக்கி தவித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால், அவர்களால் ரோகித்தை மீட்க முடியவில்லை. இதையடுத்து பைந்தூர் போலீசாருக்கு தொழிலாளர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பைந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அதன்பின்னர் சம்பவ இடத்துக்கு குந்தாப்புரா மற்றும் ைபந்தூரில் இருந்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். மேலும் டாக்டர்களும் அங்கு விரைந்து வந்தனர். 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும், பொக்லைன் எந்திரமும் அங்கு வரவழைக்கப்பட்டது. இதையடுத்து ஆழ்துைள கிணற்றில் 15 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருந்த ரோகித்தை மீட்கும் பணி தொடங்கியது.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அந்தப்பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். அவர்கள் ஆழ்துளை கிணற்றை சுற்றி திரண்டதால், மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார், அங்கு திரண்டிருந்த மக்களை அப்புறப்படுத்தினார்கள். இதுபற்றி அறிந்ததும் உயர் ேபாலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் மீட்பு பணியை முடுக்கி விட்டனர்.

இதையடுத்து ஆழ்துளை கிணற்றில் இருக்கும் ரோகித் மீது மண் சரியாமல் இருப்பதற்காக ஆழ்துளை கிணற்றை சுற்றி அடிப்புறம் வெட்டப்பட்ட ஒரு பிளாஸ்டிக் பேரலை தீயணைப்பு படையினர் பாதுகாப்பாக வைத்தனர். தீயணைப்பு படையினர் தொடர்ந்து அவரிடம் பேச்சு கொடுத்து கொண்டே இருந்தனர். இதற்கிடையே நீண்ட நேரம் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்ததால் ரோகித் மிகவும் சோர்வடைந்தார். இதனால், அங்கிருந்த டாக்டர்கள் ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்சிஜன் செலுத்தினார்கள்.

பின்னர் தீயணைப்பு படையினர் கொண்டு வந்த ஏணியில் கயிறை கட்டி ரோகித்தை மீட்கும் பணி நடந்தது. ேசறு அதிகமாக இருந்ததால், அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு படை வீரர் ஒருவர் கயிறு கட்டி ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கப்பட்டார். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

இதனால் பொக்ைலன் எந்திரத்தின் உதவியுடன் ேராகித் விழுந்த ஆழ்துளை கிணற்றின் அருகே 6 அடி தள்ளி பக்கவாட்டில் குழி தோண்டப்பட்டது. அதன் வழியாக ரோகித் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு துளை போட்டனர். பின்னர் அந்த துளையின் வழியாக ஒரு கயிற்றை ரோகித் போவி விழுந்த கிணற்றுக்கு தீயணைப்பு படை வீரர்கள் போட்டனர். அந்த கயிற்றை பிடித்து ரோகித் மேலே பத்திரமாக வந்தார். அதாவது சுமார் 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு படையினர் ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்து ரோகித்தை உயிருடன் மீட்டனர். அவர் வெளியே எடுக்கப்பட்டதும், அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். அப்போது அங்கு தயார் நிலையில் இருந்த டாக்டர்கள், ரோகித்துக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

அவர் சோர்வாக இருந்ததால் அவர் ஆம்புலன்ஸ் மூலம் குந்தாப்புரா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு ரோகித்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த ெதாழிலாளியை தீயணைப்பு படையினர் 6 மணி நேரம் போராடி உயிருடன் மீட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பைந்தூர் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

Next Story