சிறுவன்-சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; 5 பேர் கைது - வத்திராயிருப்பு அருகே
வத்திராயிருப்பு அருகே சிறுவன், 2 சிறுமிகளுக்கு 2 மாதமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
வத்திராயிருப்பு,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ரெங்கபாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வெள்ளைச்சாமி (வயது 68), கணேசன் (40), ரணவீரன் (65), ராதாகிருஷ்ணன் (50), திருவன் (52).
இவர்கள் 5 பேரும் ஒரு சிறுவன் மற்றும் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். கடந்த 2 மாதமாக தொடர்ந்து தொந்தரவு கொடுத்த நிலையில் சிறுவன் மற்றும் சிறுமிகள் இது குறித்து தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக நேற்று ஊர்கூட்டம் நடத்தியுள்ளனர். அதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பிரச்சினை உருவாகியுள்ளது. இது குறித்து வத்திராயிருப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பெற்றோரின் புகாரை தொடர்ந்து 5 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 5 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட கணேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய அணி ஒன்றிய செயலாளராவார்.
Related Tags :
Next Story