மாவட்ட செய்திகள்

திருவேங்கடம் அருகே பிளஸ்-1 மாணவர் தற்கொலை: தந்தை கண்டித்ததால் சோக முடிவு + "||" + Plus-1 student suicide near Thiruvenkadam

திருவேங்கடம் அருகே பிளஸ்-1 மாணவர் தற்கொலை: தந்தை கண்டித்ததால் சோக முடிவு

திருவேங்கடம் அருகே பிளஸ்-1 மாணவர் தற்கொலை: தந்தை கண்டித்ததால் சோக முடிவு
திருவேங்கடம் அருகே சரியாக படிக்காததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவேங்கடம், 

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் காளிராஜ். இவருடைய மகன் அஜய் (வயது 16). இவர் திருவேங்கடம் அருகே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார். அஜய் பாடங்களை சரியாக படிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் காளிராஜ், அஜயை சரியாக படிக்குமாறு கூறி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட அஜய் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

உடனே உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ்-1 மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் மாணவன் தற்கொலை
மண்டைக்காடு அருகே செல்போனில் விளையாடியதை தாயார் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை அதிக நேரம் செல்போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால் விபரீதம்
திருச்சியில் அதிக நேரம் செல்போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. கடலூரில், மீனவர் விஷம் குடித்து தற்கொலை உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
கடலூரில் சுருக்குமடி வலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மீனவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
4. வளசரவாக்கம் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை பேரன் இறந்த அதிர்ச்சியில் தாத்தாவும் சாவு
மருத்துவ கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பேரன் இறந்த அதிர்ச்சியில் அவரது தாத்தாவும் மாரடைப்பால் உயிரிழந்தார்.
5. தொட்டியம் அருகே குடும்ப பிரச்சினையால் பட்டதாரி பெண் தற்கொலை முசிறி சப்-கலெக்டர் விசாரணை
தொட்டியம் அருகே குடும்ப பிரச்சினையில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் முசிறி சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை