மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி: கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி: கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 Feb 2020 4:00 AM IST (Updated: 18 Feb 2020 2:05 AM IST)
t-max-icont-min-icon

மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கல்பாக்கம்,

கல்பாக்கம் அடுத்த வசுவசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் அசோக்குமார் (வயது 37). கூலி வேலை செய்து வந்தார். திருமணமான இவருக்கு ரேவதி (34) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

அசோக்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளதாகவும், அதனால் குடும்பத்தை சரியாக கவனிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிருதிப்தியடைந்த ரேவதி கணவரை விட்டு பிரிந்து, கடந்த ஒரு மாதமாக தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள தோழி வீட்டில் சென்று தங்கியுள்ளார்.

இதனால் தனிமையில் இருந்த அசோக்குமார் விரக்தியடைந்து நேற்று மாலை வீட்டில் புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த சதுரங்கப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமானுஜம் ஆகியோர் விரைந்து சென்று இறந்து போன அசோக்குமார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story