மங்களபுரத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சேவையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் கலெக்டரிடம் மனு
மங்களபுரத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சேவையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நாமக்கல்,
மங்களபுரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் மெகராஜிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- மங்களபுரத்தை சுற்றி சுமார் 20-க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. இவற்றில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நாங்கள் அனைவரும் விவசாயம் செய்து, மலை சார்ந்த கிராமங்களில் வசித்து வருகிறோம். இங்குள்ள கிராமங்களில் பஸ் வசதி அதிகம் இல்லை.
இந்த நிலையில் மங்களபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சுமார் 10 ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 3 மாத காலமாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் இயக்கப்படாமல் உள்ளது.
இங்கு வசிக்கும் பொதுமக்கள் விவசாயம்சார்ந்தவர்கள் என்பதால் அவர்களை அடிக்கடி பாம்புகள் மற்றும் விஷஜந்துக்கள் கடித்து விடுகின்றன. 108 ஆம்புலன்ஸ் சேவை இல்லாததால் 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள ராசிபுரம் மருத்துவமனைக்கோ அல்லது 25 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கோ செல்ல வேண்டி உள்ளது. மேலும் எங்கள் பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்வதால் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் விஷஜந்துக்கள் கடித்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதிக வாடகை வசூலிக்கின்றனர். எனவே எங்கள் பகுதி மக்களின் அத்தியாவசிய தேவை மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு மங்களபுரம் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் இருந்து மீண்டும் 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் கூறி இருந்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- எஸ்.பழையபாளையம் கிராமத்தில் 1.34 ஏக்கர் பரப்பளவு கொண்ட குட்டை பல ஆண்டுகளாக பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. கொல்லிமலையில் இருந்து மழைக்காலங்களில் வரும் மழைநீர் இந்த குட்டையில் தேங்கும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து விவசாயிகள் பயன் அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 1987-ம் ஆண்டு இந்த குட்டை தனிநபருக்கு பட்டா கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது அந்த குட்டையை மூடிவிட்டனர். இதனால் மழைக்காலங்களில் வரும் தண்ணீர் குட்டையில் தேங்க வழியில்லாமல் பரவலாக சென்று விடுகிறது. எனவே தனிநபருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து, கிராம வரைபடத்தில் உள்ளபடி குட்டையை மீட்டு விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் குட்டையை தூர்வாரி ஆழப்படுத்தி தர வேண்டும். மேலும் இந்த குட்டை வழியாக பயன்பாட்டில் இருந்து வந்த பொதுபாதையையும் விவசாயிகளுக்கு மீட்டு கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின் நாமக்கல் நகரத்தலைவர் மகேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் மெகராஜிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- நாமக்கல்லில் 200 குடும்பத்தினர் சவரத் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது. எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
மேலும் முந்தைய காலத்தில் அரசு, சலூன் கடைகளுக்கு தேவையான நாற்காலி மற்றும் ஆயுதங்களை இலவசமாக கொடுத்து வந்தது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக அவை கொடுக்கப்படவில்லை. இது தொடர்பாக நாங்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மனு கொடுத்து உள்ளோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தாங்கள் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

Related Tags :
Next Story