மராட்டியத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி; மருத்துவ கண்காணிப்பில் இருந்த 50 பேர் வீடு திரும்பினர் சுகாதாரத்துறை அதிகாரி தகவல்
கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவ கண்காணிப்பில் இருந்த 50 பேர் வீடு திரும்பினர் என மாநில சுகாதாரத்துறை அதிகாரிதெரிவித்தார்.
மும்பை,
சீனாவில் பெருமளவு உயிர்பலி ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நமது நாட்டில் பரவி விடாமல் இருப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமானநிலையத்தில் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது.
மும்பையில் கடந்த மாதம் 18-ந்தேதி முதல் தற்போது வரை வெளிநாடுகளில் இருந்து மும்பைக்கு வந்த பயணிகள் 36 ஆயிரத்து 28 பேருக்கு விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டது.
இவர்களில் சீனா, பிலிப்பைன்சை சேர்ந்தவர்கள் உள்படபலர் கொரோனா அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மும்பை, புனே, அகமதுநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் தனிமை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டனர்.
50 பேர் வீடு திரும்பினர்
தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர்களின் ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மராட்டியத்தில் கொரோனா அறிகுறியுடன் 60 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது ரத்த பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. இதில் 50 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினர். 6 பேர் விரைவில் வீடு திரும்புவார்கள். மற்ற 4 பேர் தொடர்ந்து மருத்துவ கண் காணிப்பில் உள்ளனர். அவர்களின் ரத்த பரிசோதனை முடிவு 2 நாட்களில் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story