8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது
திருப்பத்தூர் அருகே 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் உள்ள திருநீலகண்டர் தெருவை சேர்ந்தவர் பூபதி (வயது 42). இவருக்கு சொந்தமான நிலம் திருப்பத்தூர் அருகே ராஜாபாளையத்தில் உள்ளது. நிலத்தில் பருத்தி பயிரிட்டுள்ளார். நேற்று பருத்தி பயிருக்கு இடையே சுமார் 8 அடி நீளமுள்ள மலைபாம்பு ஒன்று சுற்றித் திரிந்தது.
அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். ஊர் இளைஞர்கள் ஒன்று திரண்டு அந்த மலைப்பாம்பை பிடித்து, திருப்பத்தூர் வனக்காப்பாளர் ரவியிடம் ஒப்படைத்தனர். பின்னர் ஜவ்வாதுமலை காப்புக்காடு பகுதியில் மலைப்பாம்பு விடப்பட்டது.
Related Tags :
Next Story