டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு


டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 19 Feb 2020 3:30 AM IST (Updated: 18 Feb 2020 6:58 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட பா.ஜனதா இளைஞரணி முன்னாள் தலைவர் ஜெயராமன் தலைமையில் இசங்கன்விளையை மற்றும் வடலிவிளை பகுதியை சேர்ந்த பொது மக்கள் ஏராளமானோர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:–

நாகர்கோவில், 

நாகர்கோவில் கோட்டார் கேப்ரோடு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு உள்ளது. இந்த டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என கடந்த மாதம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதையும் மீறி திறக்கப்பட்டு உள்ளது. கடையின் அருகே ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் பங்க் ஆகியவை உள்ளன.

மேலும் மதுபிரியர்களால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே பொதுமக்களின் நலனை கருதி டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Next Story