சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2020 3:15 AM IST (Updated: 18 Feb 2020 7:23 PM IST)
t-max-icont-min-icon

அரியலூர் அண்ணா சிலை அருகில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரியலூர்,

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வீடுகளுக்கு வழங்கும் சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும். உணவு விடுதிகளுக்கு வழங்கப்படும் இணைப்புகளும் விலை உயர்த்தப்பட்டதால் உணவின் விலையும் உயரும். 

எனவே உடனடியாக மத்திய அரசு சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவகுமார், சந்திரசேகர், சுரே‌‌ஷ், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story