கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் ரத்ததான கழக கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டம் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை


கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் ரத்ததான கழக கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டம்  அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 19 Feb 2020 3:30 AM IST (Updated: 18 Feb 2020 8:07 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து ரத்ததான கழக கூட்டமைப்பினர் நேற்று காலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் ரத்ததான கழக கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம் 

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து ரத்ததான கழக கூட்டமைப்பினர் நேற்று காலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புத்துயிர் ரத்ததான கழக தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார்.

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து நோய்களுக்கும் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

பேச்சுவார்த்தை 

கூட்டமைப்பு நிர்வாகிகள் காளிதாஸ், ராஜேஷ் கண்ணன், அன்புராஜ், சரமாரியப்பன், புருஷோத்தமன், சண்முகராஜ், சின்ன மாரிமுத்து, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உதவி கலெக்டர் விஜயா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story