குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 2-வது நாளாக முஸ்லிம்கள் போராட்டம்
திருச்சியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் நேற்று முன்தினம் இரவு முஸ்லிம்கள் திடீரென ஒன்று திரண்டு தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடலுக்கு வந்தனர். அவர்கள் அங்கு கொட்டும் பனியையும் பொருட் படுத்தாது விடிய விடிய அமர்ந்து இருந்தனர்.
நேற்று 2-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்ந்தது. வெயில் கொளுத்தியதால் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு பாடல்களையும் இசையுடன் பாடினர். சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடி சம்பவத்தை கண்டித்தும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பேசினார்கள்.
Related Tags :
Next Story