பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்


பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2020 11:00 PM GMT (Updated: 18 Feb 2020 7:39 PM GMT)

சிவாடியில் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்,

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சிவாடியில் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், எனவே இந்த முயற்சியை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் சார்பாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் சுத்திகரிப்பு நிலையத்தை கிராம விளைநிலங்களில் அமைப்பதை கைவிட்டு அரசு புறம்போக்கு நிலத்தில் அமைக்கவேண்டும் என வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் கே.என்.மல்லையன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் டி.ரவீந்திரன் ,தமிழ்நாடு மலைவாழ் சங்க மாநில தலைவர் பி.டில்லிபாபு , விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அருச்சுனன் மற்றும் நிர்வாகிகள் எஸ்.எஸ்.சின்னராசு, எம்.மணி, அந்தோனிராஜ், ஆர்.சின்னசாமி, சிவாடி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் பழனியம்மாள் பச்சலிங்கம், கிளை நிர்வாகிகள் சிவகுரு, ரமே‌‌ஷ், வாசு உள்ளிட்டோர் பேசினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர் குப்புசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். போராட்டத்தின் முடிவில் மாவட்ட கலெக்டர் எஸ்.மலர்விழியை சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

Next Story