வாலாஜாபாத்தில் ரூ.48 லட்சம் மோசடி செய்தவர் கைது குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
வாலாஜாபாத்தில் ரூ.48 லட்சம் மோசடி செய்தவரை குற்றப்பரிவு போலீசார் கைது செய்தனர்.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் இருசக்கர வாகனங்களை தவணை முறையில் விற்பனை செய்து வந்தவர் மகேந்திரன் (வயது 37). வாடிக்கையாளர்களிடம் இருந்து முழு தவணை பணத்தையும் பெற்றுக்கொண்டு கடன்கொடுத்த நிதி நிறுவனங்களுக்கு பணத்தை செலுத்தாமல் இருந்து வந்தார்.
மேலும் அவர் வாடிக்கையாளர்களுக்கு நிதி நிறுவனங்களின் தடையில்லா சான்று போலியாக அளித்து ஏமாற்றி உள்ளார். கடன் வழங்கிய தனியார் நிதி நிறுவனத்தின் ரூ.48 லட்சத்தை மோசடி செய்து ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நிதி நிறுவனம் புகார் செய்தது.
புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தென்னரசு, சப்-இன்ஸ்பெக்டர் லில்லி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர். பின்னர் அவரை காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story