சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2020 4:00 AM IST (Updated: 19 Feb 2020 1:16 AM IST)
t-max-icont-min-icon

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று மாலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட தலைவர் ஆர்.டி.வி. சீனுவாசக்குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் தயானந்தம், துணைத்தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், பொதுமக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தபடி கோ‌‌ஷம் எழுப்பினர்.

இதில் மாவட்ட எஸ்.சி. அணி தலைவர் சுரே‌‌ஷ்ராம், மாவட்ட துணைத்தலைவர்கள் நாராயணசாமி, விஜயரங்கன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் விஸ்வ நாதன், காஜாமொய்தீன், ராஜே‌‌ஷ், சேகர், வட்டார தலைவர்கள் ராதா, வெங்கடேசன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தன்சிங், பேரூர் கழக தலைவர் கதிர்வேல், நிர்வாகிகள் புருஷோத்தமன், ரமே‌‌ஷ், ஜெயப்பிரகா‌‌ஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story