மாவட்ட செய்திகள்

சேலத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த பட்டதாரி வாலிபர் கைது + "||" + ATM in Salem Graduate youth arrested for breaking machine

சேலத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த பட்டதாரி வாலிபர் கைது

சேலத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த பட்டதாரி வாலிபர் கைது
சேலத்தில் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலை கிடைக்காததால் கொள்ளையடிக்க முயன்றதாக அவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
கொண்டலாம்பட்டி,

சேலம் கொண்டலாம்பட்டி அருகே அரியானூர் பகுதியில் பழைய சேர்மன் தோட்டம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் கனரா வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தை அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர்.


இந்தநிலையில் சம்பவத்தன்று ஏ.டி.எம். மையத்திற்கு அந்த பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்றனர். அப்போது அங்கு ஏ.டி.எம். எந்திரம் மற்றும் அதில் பொருத்தப்பட்டு இருந்த 2 கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவை உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமராவை உடைக்கும் முன்பு அதில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.

அதில் வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாரையால் உடைக்க முயற்சி செய்து அது முடியாமல் போகவே அவர் திரும்பி செல்வது பதிவாகி இருந்தது. இதையொட்டி சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் பணியாரக்கடை வைத்து நடத்தி வரும் கண்ணன் என்பவரது மகன் கார்த்திக்ராஜா (வயது 25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதை ஒப்புக்கொண்டார்.

கைது

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் பி.எஸ்.சி. பட்டதாரி என்றும், வேலை கிடைக்காமல் இருந்ததால் சிரமப்பட்டு வந்ததும், இதனால் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து அதில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க முயன்றதாகவும் வாக்குமூலம் அளித்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டம் முழுவதும் 358 வழக்குகள் பதிவு; 412 பேர் கைது
மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமலில் உள்ள 144 தடை உத்தரவை மீறியதாக 358 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 412 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2. வெனிசூலா அதிபரை கைது செய்ய அமெரிக்கா தீவிரம்: தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.112 கோடி சன்மானம் அறிவிப்பு
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக கூறி வெனிசூலா அதிபரை கைது செய்ய அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. அவரது கைது தொடர்பாக தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.112 கோடி சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
3. சென்னையில் பயங்கரம் பாலியல் துன்புறுத்தல் செய்து 10 வயது சிறுமி கொலை 2-வது மாடியில் இருந்து கீழே வீசிய தொழிலாளி கைது
10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து 2-வது மாடியில் இருந்து கீழே வீசி கொலை செய்த கட்டிடத்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
4. காரமடை அருகே பெள்ளாதி கூட்டுறவு சங்கத்தில் ரூ.4 கோடியே 80 லட்சம் மோசடி முன்னாள் தலைவர், செயலாளர் கைது
காரமடை அருகே உள்ள பெள்ளாதி கூட்டுறவு சங்கத்தில் ரூ.4 கோடியே 80 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் தலைவர், செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
5. பாலியல் துன்புறுத்தல் செய்து 10 வயது சிறுமி கொலை - தொழிலாளி கைது
10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து 2-வது மாடியில் இருந்து கீழே வீசி கொலை செய்த கட்டிடத்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...