காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு நேரு யுவகேந்திரா இளைஞர்கள் வருகை கலெக்டருடன் கலந்துரையாடினர்
காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வந்துள்ள நேரு யுவகேந்திரா இளைஞர்கள், குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவுடன் கலந்துரையாடினர்.
கன்னியாகுமரி,
மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுதுறை சார்பில் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்‘ என்ற மாநிலங்களுக்கு இடையேயான இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சிக்காக காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு, கத்துவா, தோடா, உதம்பூர், அனந்தநாக், பாராமுல்லா, பழுகாம், கந்தர்பால் ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த 42 இளைஞர்கள், கடந்த 4-ந் தேதி காஷ்மீரில் இருந்து புறப்பட்டு 8-ந் தேதி தமிழகம் வந்தனர்.
அவர்கள் நேரு யுவகேந்திரா உதவி இயக்குனர் சம்பத்குமார் தலைமையில் சென்னை, மகாபலிபுரம், புதுச்சேரி உள்பட பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். அதன்பிறகு அவர்கள் பஸ் மூலம் நேற்று காலை கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தனர். அவர்களை குமரி மாவட்ட நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பாலாஜி வரவேற்றார்.
கலெக்டர்
பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே இளைஞர்களை சந்தித்து பேசினார். கலெக்டருடன், மாணவர்கள் கலந்துரையாடினர். அதன்பிறகு கலெக்டர் பேசும் போது, இந்தியாவின் தென் எல்லைக்கு வந்துள்ள உங்களை குமரி மாவட்டம் சார்பில் வரவேற்கிறேன். குமரி மாவட்டம் பரப்பளவில் சிறிய மாவட்டம் என்றாலும் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. கல்வியறிவு, கலாசாரம், பண்பாடு போன்ற பல்வேறு சிறப்புகளில் மற்ற மாவட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடித்தல், ரப்பர் போன்றவை சிறந்து விளங்குகிறது. சுற்றுலா தலங்கள் நிறைந்த இந்த மாவட்டம் முழுவதும் சென்று பார்வையிட வேண்டும் என்றார்.
தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபம், முக்கடல் சங்கமம், அரசு அருங்காட்சியகம் போன்றவற்றை பார்வையிட்ட அவர்கள் புதுச்சேரி புறப்பட்டு சென்றனர்.
கவர்னருடன் சந்திப்பு
அங்கு கவர்னர் கிரண்பேடியை சந்தித்து விட்டு வருகிற 22-ந் தேதி சென்னையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தையும் சந்திக்கிறார்கள்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து 23-ந் தேதி காஷ்மீர் புறப்பட்டு செல்கின்றனர். இதே போல தமிழ்நாட்டில் இருந்தும் நேரு யுவகேந்திரா இளைஞர்கள் காஷ்மீர் செல்ல உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சென்னை நேரு யுவகேந்திரா செய்துள்ளது.

Related Tags :
Next Story