குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2020 4:00 AM IST (Updated: 19 Feb 2020 4:55 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கடலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர்,

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், அந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும், இந்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட துணை செயலாளர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். வட்ட பொருளாளர் ஜெயராஜ், நகர செயலாளர் அரிகிருஷ்ணன், வட்டக்குழு நாகராஜ், பாக்கியம், செல்வம், இந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவாசகம், மாவட்ட செயலாளர் துரை, மாநிலக்குழு குளோப், மாவட்ட துணை செயலாளர் காசிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story