சிக்னல் கோளாறு: செங்கோட்டை–நெல்லை பாசஞ்சர் ரெயில் தாமதம் பயணிகள் அவதி


சிக்னல் கோளாறு: செங்கோட்டை–நெல்லை பாசஞ்சர் ரெயில் தாமதம் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 20 Feb 2020 3:30 AM IST (Updated: 19 Feb 2020 6:55 PM IST)
t-max-icont-min-icon

சிக்னல் கோளாறு காரணமாக செங்கோட்டை–நெல்லை பாசஞ்சர் ரெயில் தாமதமாக நெல்லைக்கு வந்தது.

நெல்லை, 

சிக்னல் கோளாறு காரணமாக செங்கோட்டை–நெல்லை பாசஞ்சர் ரெயில் தாமதமாக நெல்லைக்கு வந்தது.

பாசஞ்சர் ரெயில் 

செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு தினமும் காலை 6.50 மணிக்கு பாசஞ்சர் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் காலை 8.50 மணிக்கு நெல்லைக்கு வந்து சேரும். இந்த ரெயிலில் நெல்லை, சேரன்மாதேவி, அம்பை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் படிக்கும் மாணவ–மாணவிகள், அரசு ஊழியர்கள், அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பயணம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.50 மணிக்கு நெல்லைக்கு பாசஞ்சர் ரெயில் புறப்பட்டது. செங்கோட்டை அடுத்து உள்ள விசுவநாதபுரம் ரெயில்வே கேட்டில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் சுமார் ½ மணி நேரம் ரெயில் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

பயணிகள் அவதி 

பின்னர் ஊழியர்கள் வந்து சிக்னல் கோளாறை சரிசெய்தனர். அதன் பிறகு அங்கிருந்து ரெயில் புறப்பட்டு வந்தது. நெல்லைக்கு காலை 8.50 மணிக்கு வரவேண்டிய ரெயில் ½ மணி நேரம் தாமதமாக அதாவது காலை 9.20 மணிக்கு வந்து சேர்ந்தது. இதனால் அந்த ரெயிலில் வந்த பணிகள் அவதிப்பட்டனர். இந்த ரெயில் ½ மணி நேரம் தாமதமாக வந்ததால் நெல்லையில் இருந்து 9.15 மணிக்கு செங்கோட்டை செல்லக்கூடிய பயணிகள் ரெயிலும் ¼ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. 

Next Story