நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை நடக்கிறது
நெல்லை மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்கிறது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்கிறது.
இதுதொடர்பாக மாவட்ட செய்தி– மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
அம்மா திட்ட முகாம்
பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு பயணம் செய்து நீண்ட நேரம் காத்திருந்து மனுக்களை அளிப்பதால் ஏற்படும் நேரம், செலவு மற்றும் பல்வேறு இன்னல்களை போக்கும் வகையில் மக்கள் வசிக்கும் கிராமத்திற்கே வருவாய்த்துறை அலுவலர்கள் சென்று குறைகளை கேட்கும் வகையில் அம்மா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் நாளை (வெள்ளிக்கிழமை) நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடக்கிறது. நெல்லை தாலுகா சிவகுருநாதன் திருத்து, அழகநேரி, கட்டளை உதயநேரி ஆகிய கிராமங்களிலும், ராதாபுரம் தாலுகா அச்சம்பாடு, அம்பை தாலுகா அயன்சிங்கம்பட்டி, நாங்குநேரி தாலுகா ஊச்சிகுளம், ஆலங்குளம், திருவரங்கனேரி, சேரன்மாதேவி தாலுகா கிரியம்மாள்புரம், பாளையங்கோட்டை தாலுகா உடையார்குளம், வாகைகுளம், மானூர் தாலுகா தெற்குப்பட்டி, திசையன்விளை தாலுகா கோட்டைகருங்குளம் ஆகிய கிராமங்களில் முகாம் நடக்கிறது.
மனுக்கள் அளிக்கலாம்
மேற்கண்ட கிராமங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடக்கிறது. இலவச வீட்டுமனை பட்டாக்கள், முதியோர் உதவி தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோர் உதவி தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்பட சமூக பாதுகாப்பு திட்டங்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், நிலத்தாவாக்கள், சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற சேவைகள் தங்கள் கிராமத்திற்கு கிடைத்திடும் வகையில் வருவாய்த்துறை மககளுக்கு ஆற்றி வரும் சேவையை துரிதப்படுத்தப்பட்டு மக்கள் பயனடைய இதன் மூலம் வழிவகை செய்யப்படுகிறது.
எனவே பொதுமக்கள் இந்த முகாமில் தகுந்த ஆவணங்களுடன், தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை நேரில் அளித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story