மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் நெல் அறுவடை எந்திர டிரைவர்கள் 2 பேர் பலி + "||" + Two paddy harvesting drivers killed in motorcycle collision

மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் நெல் அறுவடை எந்திர டிரைவர்கள் 2 பேர் பலி

மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் நெல் அறுவடை எந்திர டிரைவர்கள் 2 பேர் பலி
பெரம்பலூரில் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நெல் அறுவடை எந்திர டிரைவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா ஆய்க்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்கண்ணு. இவரது மகன் இளவரசன் (வயது 23). கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா அமங்களத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் ரஞ்சித் (24). நண்பர்களான இவர்கள் நெல் அறுவடை எந்திர டிரைவர்கள் ஆவர்.


தற்போது நெல் அறுவடை சீசன் என்பதால் இருவரும் பெரம்பலூரில் ஒரு இடத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வேலை முடிந்ததும், தாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இளவரசன் மோட்டார் சைக்கிளை ஓட்ட, பின்னால் ரஞ்சித் அமர்ந்திருந்தார்.

2 பேர் பலி

அப்போது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் துறைமங்கலம் 3 ரோடு மேம்பாலத்தை தாண்டி பிரிவு சாலையை கடக்கும் போது, எதிரே திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஒரு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையோரம் தூக்கி வீசப்பட்ட இளவரசனும், ரஞ்சித்தும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இளவரசன், ரஞ்சித் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை அறிந்து மருத்துவமனைக்கு வந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அவர்களது உடல்களை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

விசாரணை

இதுதொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் உயிரிழந்த இளவரசன், ரஞ்சித் ஆகியோர் தங்களது வீட்டிற்கு ஒரே மகன் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலி
புதுச்சத்திரம் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.
2. பணி முடிந்து வீடு திரும்பிய போது ஸ்கூட்டர் கவிழ்ந்து செவிலியர் பலி மற்றொருவர் படுகாயம்
காவேரிப்பட்டணம் அருகே ஸ்கூட்டர் கவிழ்ந்த விபத்தில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த செவிலியர் பலியானார். அவருடன் சென்ற மற்றொரு செவிலியர் படுகாயம் அடைந்தார்.
3. தாரமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி மீன் பிடித்தபோது பரிதாபம்
தாரமங்கலம் அருகே மீன் பிடித்தபோது ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்.
4. சூளகிரி அருகே லாரி மீது கார் மோதி தொழில் அதிபர் பலி குழந்தை உள்பட 5 பேர் படுகாயம்
சூளகிரி அருகே லாரி மீது கார் மோதி தொழில் அதிபர் பலியானார். மேலும் குழந்தை உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலி 14 போலீசாருக்கு தொற்று உறுதி
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் ஒருவர் பலியானார். மேலும் 14 போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.