நாகையில் நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


நாகையில் நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2020 4:30 AM IST (Updated: 20 Feb 2020 1:32 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட கவுன்சில் தலைவர் நக்கீரன், மண்டல செயலாளர் தம்பித்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் வள்ளுவன் கலந்துகொண்டு பேசினார்.

ரூ. 6 ஆயிரம் ஓய்வூதியம்

ஆர்ப்பாட்டத்தில் ஆய்வு என்ற பெயரில் கொள்முதல் பணியாளர்களை வேலை நீக்கம் செய்யும் போக்கை கைவிட வேண்டும். தொழிலாளிகள் மீதான பழிவாங்கும் போக்கை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தினசரி கூலியை ரொக்கமாக வழங்க வேண்டும். உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான நேரடி நியமனத்தை கைவிட வேண்டும். நவீன அரிசி ஆலை தொழிலாளர்களின் 3-வது ஊதியக்குழு நிர்ணயம் முதல் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைந்து பணப்பயன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

Next Story