மாவட்ட செய்திகள்

முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும் செந்துறை ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் + "||" + Resolution of the Centurion Union Committee to set up cashew factory

முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும் செந்துறை ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்

முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும் செந்துறை ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்
செந்துறை பகுதியில் முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், அதன் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சிவாஜி, துணைத் தலைவர் மணிவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவி வரவேற்றார். ஒன்றிய மேலாளர் முருகானந்தம் தீர்மானங்களை வாசித்தார்.


கூட்டத்தில் செந்துறை ஒன்றியத்தில் அதிக அளவில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. எனவே இங்கு முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும். உஞ்சினி கிராமத்தில் உள்ள தனியார் சிமெண்டு ஆலை லாரிகள் நல்லாம்பாளையம், இலங்கைச்சேரி கிராம விவசாயிகள் பயன் படுத்தி வந்த நீர் வழித்தடம் மற்றும் வண்டிப்பாதையை ஆக்கிரமித்து செல்வதை தடுக்க வேண்டும்.

பசுமைக்காடுகள்

ஆலத்தியூர் மற்றும் தளவாய் பகுதியில் இயங்கிவரும் சிமெண்டு ஆலை நிர்வாகத்தினர் கோவில் நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள் உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமித்து சுரங்கங்கள் வெட்ட முயற்சி செய்வதை தடுக்க வேண்டும். புதிதாக அமைக்கப்பட இருக்கும் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

பழைய சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூடி பசுமைக் காடுகள் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிமெண்டு் ஆலை கழிவுகளை வெள்ளாற்றில் விடுவதால் ஆற்று நீர் மாசுபடுகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வழக்கறிஞர் சங்க ஒருங்கிணைப்பு குழுவை சம்மேளனத்துடன் இணைப்பதற்கு வரவேற்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
வழக்கறிஞர் சங்க ஒருங்கிணைப்பு குழுவை சம்மேளனத்துடன் இணைப்பதற்கு வரவேற்பு தெரிவித்து பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. திருவாரூரில் நடைபெறும் வணிகர் மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும் தொழில் முனைவோர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
மே 5-ந் தேதி திருவாரூரில் நடைபெறும் வணிகர் மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும் என்று தொழில் முனைவோர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
3. குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - திருப்பூரில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
4. பிப்ரவரி மாத ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டத்தில் தீர்மானம்
பிப்ரவரி மாத ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
5. மாவட்டத்தில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.