கொழுந்தியாளை கொலை செய்த கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை - சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு
கொழுந்தியாளை கொலை செய்த கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
சிவகங்கை,
உலகம்பட்டியை அடுத்த குளத்துபட்டியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது முதல் மகளை மணியாரம்பட்டியை சேர்ந்த கணேசன் (வயது 30) என்பவருக்கு திருமணம் செய்து தந்துள்ளார். கணேசன் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் திருமணமானதில் இருந்து கணேசன் மாமனார் வீட்டிலேயே தங்கியுள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி காலையில் கணேசன் வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது மனைவியின் தங்கையான, கணேசனின் கொழுந்தியாள் ஜெயலட்சுமி (19) என்பவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதைபார்த்த கணேசன், ஜெயலெட்சுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அவர் சத்தம் போட்டதால் ஆத்திரம் அடைந்த கணேசன் அங்கிருந்த சுத்தியலால் ஜெயலட்சுமியை அடித்து கொலை செய்தார்.
அதைதொடர்ந்து உலகம்பட்டி போலீசார் கணேசனை கைது செய்து அவர் மீது சிவகங்கையில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரணை செய்த மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி செம்மல் குற்றம் சாட்டப்பட்ட கணேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story