திருச்சியில் நடந்த மாநில கால்பந்து போட்டியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி அணி சாம்பியன்


மாநில அளவிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி அணிக்கு கோப்பை
x
மாநில அளவிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி அணிக்கு கோப்பை
தினத்தந்தி 20 Feb 2020 10:31 AM GMT (Updated: 2020-02-20T16:01:10+05:30)

திருச்சியில் நடந்த மாநில கால்பந்து போட்டியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது.

மாநில கால்பந்து
திருச்சி பி‌‌ஷப் ஹீபர் கல்லூரியின் பொன்விழா ஆண்டையொட்டி மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான கார்டினர் நினைவு கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்தன. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 14 கல்லூரி அணிகள் கலந்து கொண்டு விளையாடின. நேற்று அரை இறுதி போட்டிகள் நடந்தன.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி அணியும், திருச்சி பி‌‌ஷப் ஹீபர் கல்லூரி அணியும் மோதியதில் 1-0 என்ற கோல் கணக்கில் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி அணி வெற்றி பெற்றது. கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும் கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும் மோதியதில் 2-0 என்ற கோல் கணக்கில் ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப்போட்டி
இறுதிப் போட்டியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி அணியும், கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும் மோதின. இதில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்துடன் கார்டினர் நினைவு கோப்பையை தட்டிச்சென்றது.

மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் திருச்சி பி‌‌ஷப் ஹீபர் கல்லூரி அணி, கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

Next Story