இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2020 10:15 PM GMT (Updated: 2020-02-20T19:59:33+05:30)

திருப்பத்தூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர், 

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் திருப்பத்தூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் எம்.சுந்தரேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சாமிகண்ணு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் எம்.நந்தி, தேவதாஸ், ஆர்.முல்லை, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாமலை, பழனி, நகர துணை செயலாளர்கள் முருகன், பைரோஸ், மயில்வாகனன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆறுமுக பாண்டி நன்றி கூறினார்.

Next Story