மண் வளம் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி
க.பரமத்தி ஒன்றியம், தொக்குப்பட்டி கிராமத்தில் மண் அட்டை செயல் விளக்க மாதிரிகள் என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மண் வளம் பற்றிய பயிற்சி நடைபெற்றது.
க.பரமத்தி,
கரூர் நடமாடும் மண் பரிசோதனை நிலைய மேலாண்மை அலுவலர் ரேணுகாதேவி தலைமை தாங்கி, மண்மாதிரிகள் பற்றியும், மண் மாதிரியை சேகரிப்பது பற்றியும் எடுத்துக் கூறினார்.
புழுதேரி வேளாண்மை அறிவியல் மைய மண்ணியில் நிபுணர் மாரிக்கண்ணு மண்ணில் உள்ள சத்துக்கள் பற்றியும், மண்ணின் தன்மைகேற்ப சாகுபடி செய்யும் பயிர்கள் பற்றியும் எடுத்துக் கூறினார். தொடர்ந்து பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டது.
முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் ஞானசேகர் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story