விபத்தை தடுக்க சாலையோர மரங்களில் வர்ணம் பூசும் பணி தீவிரம்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சாலையோரங்களில் அதிக அளவிலான புளியமரம், பனைமரம், ஆலமரங்கள் ஆகியவை உள்ளன.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கீழப்பழுவூரில் இருந்து திருமழபாடி செல்லும் சாலை, திருமானூரில் இருந்து திருமழபாடி செல்லும் சாலை, இலந்தைகூடம் சாலை மற்றும் வெங்கனூர் ஆகிய சாலையோரங்களில் அதிக அளவிலான புளியமரம், பனைமரம், ஆலமரங்கள் ஆகியவை உள்ளன.
இதனால் இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் வாகனங்கள் மரத்தின் மீது மோதி விபத்து ஏற்படாமல் இருப்பதை தடுக்க கோட்ட பொறியாளர் ராமச்சந்திரன் உத்தரவின்பேரில், சாலையோரத்தில் உள்ள அனைத்து மரங்களுக்கும் கருப்பு, வெள்ளை வர்ணம் பூசபட்டு வருகிறது.
மேலும் ஒளி எதிரொலிக்கும் பட்டைகளை நிறுவுதல், சாலையில் மையக்கோடு வரைதல், சாலையோரம் உள்ள முட்செடிகளை அப்புறப்படுத்துதல், மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றுவது மற்றும் சாலையின் இரு பக்கங்களிலும் பள்ளம் அதிகமாக உள்ள இடங்களில் கிராவல் மண் கொட்டி சீர்செய்தல் போன்ற பணிகளை உதவி கோட்டப்பொறியாளர் நடராஜன் மற்றும் இளநிலைப்பொறியாளர் ராஜா ஆகியோரின் மேற்பார்வையில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் முழு வீச்சில் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story