காஞ்சீபுரம் அருகே பழமையான கற்சிலை கண்டுபிடிப்பு


காஞ்சீபுரம் அருகே பழமையான கற்சிலை கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 20 Feb 2020 10:15 PM GMT (Updated: 20 Feb 2020 5:25 PM GMT)

காஞ்சீபுரம் அருகே பழமையான பெண் தெய்வ கற்சிலை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அடுத்த தாமல் அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டினர். அப்போது மண்ணில் ஏதோ தட்டுப்படும் சத்தம் கேட்டது.

உடனடியாக தொடர்ந்து ஆழமாக தோண்டினர். அப்போது நிலத்துக்கு அடியில் 3 அடி உயர பழங்கால பெண் தெய்வ சிலை ஒன்று இருந்தது.

இந்த சிலை குறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் வருவாய் துறை அதிகாரிகள், அந்த சிலையை மீட்டு எடுத்து செல்ல முயன்றனர்.

அப்போது கிராம மக்கள், இந்த சிலை இந்த ஊருக்கு சொந்தமானது. இதை எடுத்து செல்லக்கூடாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிலை எவ்வளவு ஆண்டு பழமையானது என்று தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்து, பின்னர் மாவட்ட கலெக்டர் மூலம் கிராம பொதுமக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அந்த சிலையை எடுத்துச்செல்ல அனுமதித்தனர்.

Next Story