10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வில் இடைநிலை ஆசிரியர்களை பறக்கும்படையில் ஈடுபடுத்த கோரிக்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு
இடைநிலை ஆசிரியர்களை 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வில் பறக்கும்படையில் ஈடுபடுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
திருவள்ளூர்,
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.வெற்றிச்செல்வியை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அடுத்தமாதம் நடைபெற இருக்கும் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வில் தேர்வு பணிக்கு பணிமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை உட்படுத்தவேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், மற்றும் உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்களை பறக்கும்படையில் தேர்வு அறை கண்காணிப்பாளராக ஈடுப்படுத்துவது வழக்கம்.
ஆனால் சில ஆண்டுகளாக பறக்கும் படையில் ஈடுப்படுத்தப்படவில்லை. இந்த ஆண்டு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட சிறப்பாசிரியர்களை பணி மூப்பு அடிப்படையில் பறக்கும்படையில் ஈடுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.
மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story