சாலை விபத்தில் பலியான எம்.டி.என்.எல். ஊழியர் குடும்பத்துக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவு


சாலை விபத்தில் பலியான   எம்.டி.என்.எல். ஊழியர் குடும்பத்துக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு   தீர்ப்பாயம் உத்தரவு
x
தினத்தந்தி 20 Feb 2020 10:05 PM GMT (Updated: 2020-02-21T03:35:47+05:30)

சாலை விபத்தில் பலியான எம்.டி.என்.எல். ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை, 

மும்பை காந்திவிலியை சேர்ந்தவர் பிரபாகர் சவான்(வயது54). எம்.டி.என்.எல். ஊழியர். இவர் கடந்த 2005-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதி விக்ரோலி பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் உள்ள நடைபாதையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஜெனரேட்டர் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பிரபாகர் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த பிரபாகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ரூ.85 லட்சம் இழப்பீடு

இந்தநிலையில் பிரபாகர் சவானின் மனைவி இழப்பீடு கேட்டு மும்பை மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் முறையிட்டார்.

அவரது மனுவை விசாரித்த தீர்ப்பாயம் பிரபாகரின் மனைவி மற்றும் 2 பிள்ளைகளுக்கு ரூ.85 லட்சத்தை இழப்பீடாக வழங்குமாறு ஜெனரேட்டர் வேன் உரிமையாளர் மற்றும் காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

Next Story