மாவட்ட செய்திகள்

கடலூரில், உதவி பேராசிரியர் காரில் இருந்த ரூ.1½ லட்சம் நகை, பணம் திருட்டு - போலீசார் விசாரணை + "||" + At Cuddalore, the assistant professor was in the car Rs.1.5 lakh jewelery, money theft - police investigation

கடலூரில், உதவி பேராசிரியர் காரில் இருந்த ரூ.1½ லட்சம் நகை, பணம் திருட்டு - போலீசார் விசாரணை

கடலூரில், உதவி பேராசிரியர் காரில் இருந்த ரூ.1½ லட்சம் நகை, பணம் திருட்டு - போலீசார் விசாரணை
கடலூரில் உதவி பேராசிரியர் காரில் இருந்த ரூ.1½ லட்சம் நகை, பணத்தை திருடிச்சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர், 

கடலூர் அருகே உள்ள திருமாணிக்குழி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் ஆனந்தன் (வயது 41). இவர் கும்பகோணம் அரசு கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் காரில் வந்திருந்தார். பின்னர் அவர் அங்குள்ள லாட்ஜ் முன்பு தனது காரை நிறுத்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது தனது காரில் உறவினர் ஒருவரை பாளையங்கோட்டை கிராமத்தில் விட்டு விட்டு வருமாறு டிரைவர் ராமலிங்கத்திடம் கூறினார். அவரும் அவருடைய உறவினரை அழைத்து சென்று விட்டு திரும்பி வந்தார். பின்னர் ஆனந்தனிடம் காரின் பின்புறம் நகை, பணம் உள்ளதாக கூறி விட்டு, சாவியை அவரிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார்.

மறுநாள் ஆனந்தன் காரின் பின்பக்கத்தை திறந்து பார்த்தார். அதில் ஒரு பெட்டியில் 13 பவுன் நகை மட்டும் இருந்தது. மற்றொரு பெட்டியில் இருந்த 4 பவுன் நகை, ரூ.40 ஆயிரத்தை காணவில்லை. அதனை யாரோ திருடிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். இது பற்றி ஆனந்தன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குடிமங்கலம் அருகே ஓடும் பஸ்சில் வங்கி செயலாளரிடம் நகை-பணம் திருட்டு - தம்பதி கைது
ஓடும் பஸ்சில் வங்கி செயலாளரிடம் நகை, பணம் திருடிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
2. மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் சென்ற மாணவியிடம் 3½ பவுன் நகை பறிப்பு
மோட்டார்சைக்கிளில் தந்தையுடன் சென்ற மாணவியிடம் 3½ பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
3. ஆத்தூரில் மூதாட்டியிடம் 11 பவுன் நகை அபேஸ் போலீஸ்காரர்கள் போல் நடித்து 2 பேர் துணிகரம்
ஆத்தூரில் போலீஸ்காரர்கள் போல் நடித்து மூதாட்டியிடம் 11 பவுன் நகை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. கோவை சிங்காநல்லூரில் டாக்டர் தம்பதி வீட்டில் நகை,பணம் திருடிய பெண் கைது
கோவை சிங்காநல்லூரில் உள்ள டாக்டர் தம்பதி வீட்டில் நகை, பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
5. குமரி மாவட்டத்தில் தொடர் கைவரிசை: பெண்களிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபர் கைது 50 பவுன் நகைகள் மீட்பு
குமரி மாவட்டத்தில் பெண்களிடம் தங்க சங்கிலியை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.