மின்நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்; 26–ந் தேதி நடக்கிறது


மின்நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்; 26–ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 22 Feb 2020 3:00 AM IST (Updated: 21 Feb 2020 5:38 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திருவண்ணாமலை மேற்பார்வை பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

திருவண்ணாமலை, 

விழுப்புரம் மின்வாரிய மண்டலத்துக்கு உட்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் வருகிற 26–ந் தேதி (புதன்கிழமை) மாலை 3 மணி அளவில் விழுப்புரம் மின்வாரிய அலுவலகத்தில் நடக்கிறது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுக்கான இந்த கூட்டத்திற்கு விழுப்புரம் மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் சிவராஜ் தலைமை தாங்குகிறார். இதில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மின்நுகர்வோர் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story