திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்


திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 21 Feb 2020 9:30 PM GMT (Updated: 21 Feb 2020 12:28 PM GMT)

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சாதி ஒற்றுமையை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

திருவண்ணாமலை, 

இதனையொட்டி சந்தவாசல் எழுச்சி கலைக்குழுவினர், விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை நடத்தினர். தனி தாசில்தார் ரமேஷ் தலைமையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் க.கதிர்சங்கர் இதனை தொடங்கி வைத்தார்.

நடைபாதை வியாபாரிகள், பஸ் பயணிகள், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் விடுதி காப்பாளர்கள் ஆர்.திவாகர், அ.சிவக்குமார், எஸ்.சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல் திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Next Story