முதல்–அமைச்சர் வருகையையொட்டி தூத்துக்குடி–திருச்செந்தூர் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்
முதல்–அமைச்சர் வருகையையொட்டி தூத்துக்குடி–திருச்செந்தூர் சாலையில் இன்று (சனிக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
முதல்–அமைச்சர் வருகையையொட்டி தூத்துக்குடி–திருச்செந்தூர் சாலையில் இன்று (சனிக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
மணிமண்டபம் திறப்பு விழா
திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி வருகிறார்.
இதனால் தூத்துக்குடி– திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, பயணம் செய்யும் மக்கள் வசதிக்காக அன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டும் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
போக்குவரத்து மாற்றம்
அதன்படி, திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும், திருச்செந்தூரில் இருந்து குரும்பூர், ஏரல், சாயர்புரம், புதுக்கோட்டை வழியாகவும் அல்லது குரும்பூர், ஸ்ரீவைகுண்டம், பேட்மாநகரம், வாகைக்குளம், புதுக்கோட்டை வழியாகவும் தூத்துக்குடிக்கு செல்லலாம்.
அதேபோல் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வாகனங்கள் புதுக்கோட்டை, சாயர்புரம், ஏரல், குரும்பூர் வழியாகவும் அல்லது புதுக்கோட்டை, வாகைக்குளம், பேட்மாநகரம், ஸ்ரீவைகுண்டம் வழியாகவும் திருச்செந்தூருக்கு செல்வதற்கு தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே பயணம் செய்யும் பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story