மாவட்ட செய்திகள்

காலாவதி தேதி பார்த்து பொருட்களை வாங்க வேண்டும்; கலெக்டர் ரத்னா அறிவுறுத்தல் + "||" + Be sure to buy items by looking at the expiration date; Collector Ratna Instruction

காலாவதி தேதி பார்த்து பொருட்களை வாங்க வேண்டும்; கலெக்டர் ரத்னா அறிவுறுத்தல்

காலாவதி தேதி பார்த்து பொருட்களை வாங்க வேண்டும்;  கலெக்டர் ரத்னா அறிவுறுத்தல்
காலாவதி தேதி பார்த்து பொருட்களை வாங்க வேண்டும் என்று நுகர்வோருக்கு கலெக்டர் ரத்னா அறிவுறுத்தி உள்ளார்.
அரியலூர், 

அரியலூரில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமையில் நடந்தது. அப்போது அவர் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசுகையில், நுகர்வோர்கள் பொருட்களை வாங்கினால் மட்டும் போதாது, அது தயாரிக்கப்பட்ட நாள், காலாவதியாகும் நாள், அந்த பொருளின் தர முத்திரை ஆகியவற்றை பார்த்த பிறகே வாங்க வேண்டும். முக்கியமாக வாங்கும் பொருட்கள் அனைத்திற்கும் ரசீது கேட்டு பெறப்பட வேண்டும். 

பொதுமக்கள் தரம் அறிந்து பொருட்களை வாங்குவதுடன் போலிகளை வாங்கி ஏமாறாமல் இருக்கவேண்டும். விளம்பரங்களை கண்டு ஏமாறக் கூடாது. பரிசுப் பொருட்கள் மற்றும் இலவச இணைப்புக்காக தரமற்ற தேவையற்ற பொருட்களை வாங்கக்கூடாது. எனவே நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருந்து தேவைக்கு மட்டும் பொருட்களை வாங்கி பயன்படுத்தி நமது வீட்டையும் நமது நாட்டையும் காப்போம் என்று உறுதி கொள்வோம் என்றார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், கோட்டாட்சியர் பாலாஜி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு) டாக்டர் பிரவீன்குமார், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் பாஸ்கரன், நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுத்தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட தலைவர் ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? அரியலூர் கலெக்டர் விளக்கம்
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீட்டில் உள்ளவர்கள் என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அரியலூர் கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
2. அரியலூர் மாவட்டத்தில், 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு - கலெக்டர் தகவல்
அரியலூர் மாவட்டத்தில் 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று கலெக்டர் ரத்னா கூறினார்.
3. வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்
அரியலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ரத்னா கேட்டுக் கொண்டுள்ளார்.
4. பட்டு விவசாயிகளுக்கு ஊக்கப்பரிசு ; கலெக்டர் வழங்கினார்
பட்டு விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் ரத்னா ஊக்கப்பரிசு வழங்கினார்.
5. 21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை முதல் செயல்படும் - கலெக்டர் ரத்னா தகவல்
21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை முதல் செயல்படும் என்று கலெக்டர் ரத்னா கூறினார் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-