மாவட்ட செய்திகள்

போதை பொருட்கள் விற்பதை தட்டிக்கேட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது + "||" + Murder Threat to Sub-Inspector

போதை பொருட்கள் விற்பதை தட்டிக்கேட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

போதை பொருட்கள் விற்பதை தட்டிக்கேட்ட  சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
திருவள்ளூரில் போதை பொருட்கள் விற்பதை தட்டிக்கேட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர், 

திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில் திருவள்ளூர் பஜார் வீதி, பஸ் நிலையம், ஆசூரி தெரு போன்ற பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த 2 பேர் கையில் பையுடன் நின்றிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் இருந்து 300 பாக்கெட் போதை பொருட்களை கைப்பற்றினார்கள்.

கொலை மிரட்டல்

விசாரணையில், போதை பொருட்களை அவர்கள் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் விற்பதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து 2 பேரும் சப்-இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

அதில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், திருவள்ளூரை சேர்ந்த சங்கர் (வயது 38) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். மேலும் தப்பி ஓடிய கருணாகரன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.