ரெயில்முன் பாய்ந்து மனைவி, குழந்தைகள் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது


ரெயில்முன் பாய்ந்து மனைவி, குழந்தைகள் சாவு:   தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
x
தினத்தந்தி 22 Feb 2020 4:30 AM IST (Updated: 22 Feb 2020 1:59 AM IST)
t-max-icont-min-icon

ஆவடி அருகே இரண்டு குழந்தைகளுடன் பெண் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரை கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது செய்யப்பட்டார்.

ஆவடி,

ஆவடி அடுத்த சேக்காடு சிங்கார திருநகர் பகுதியை சேர்ந்தவர் முத்துமாரி (வயது 25). இவரது மனைவி விஜயலட்சுமி (23).

இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணமாகி, கவிசரன் (2) மற்றும் ரிஷ்வந்த் ஏன்ற 3 மாத குழந்தையும் இருந்தது.

இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த 18-ந் தேதியன்று இரவு விஜயலட்சுமி ஆவடி அடுத்த இந்துக்கல்லூரி ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

கணவர் கைது

இதையடுத்து ஆவடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயலட்சுமி மற்றும் பலியான 2 குழந்தைகளின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மனைவி விஜயலட்சுமியை அடித்து கொடுமைப்படுத்தி, அவரை தற்கொலைக்கு தூண்டியதாக நேற்று காலை கணவர் முத்துமாரியை ஆவடி ரெயில்வே போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, பூந்தமல்லி கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story