ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்சினையை உடனே தீர்க்க வேண்டும் கலெக்டரிடம் எம்.பி. வலியுறுத்தல்


ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில்   குடிநீர் பிரச்சினையை உடனே தீர்க்க வேண்டும்   கலெக்டரிடம் எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Feb 2020 4:00 AM IST (Updated: 22 Feb 2020 3:28 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்சினையை உடனே தீர்க்க கலெக்டரிடம் டி.ஆர்.பாலு எம்.பி. வலியுறுத்தினார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல கிராமங்களில் கடந்த 4 மாதங்களாக தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு குறைதீர் முகாம்கள் நடத்தி மனுக்களை பெற்றார்.

முதல் கட்டமாக கடந்த ஆண்டு நவம்பரில் கலெக்டரை சந்தித்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை அளித்தார். அதன்படி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் ஸ்ரீபெரும்புதூர், படப்பை உள்பட 68 கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அதில் 445 மனுக்களை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையாவிடம் எம்.பி. டி.ஆர்.பாலு வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அப்போது காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம் எம்.பி. செல்வம் ஆகியோரும் உடன் இருந்தனர்.

Next Story