பட்ஜெட் கூட்டத் தொடரில் முக்கிய பிரச்சினைகளை கிளப்ப பா.ஜனதா திட்டம்
மராட்டிய பட்ஜெட் கூட்டத் தொடரில் முக்கிய பிரச்சினைகளை கிளப்ப பாரதீய ஜனதா திட்டமிட்டு உள்ளது.
மும்பை,
மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வழக்கமாக 6 வாரங்கள் நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த முறை அடுத்த மாதம் (மார்ச்) 20-ந் தேதி வரை 4 வாரங்கள் நடைபெற உள்ளது. இதில் வருகிற 6-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் ஆகும்.
பட்ஜெட் தயாரிப்பில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் துணை முதல்-மந்திரியும், நிதி மந்திரியுமான அஜித் பவார் ஆகியோர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பிரச்சினைகளை கிளப்ப திட்டம்
இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டு வருகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை மராட்டியத்தில் செயல்படுத்த வலியுறுத்தியும், விவசாய கடன் தள்ளுபடி, பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்ற சம்பவங்கள் தொடர்பாக சட்டசபையில் புயலை கிளப்ப வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
Related Tags :
Next Story