முதல்-அமைச்சர் வன்முறையை தூண்டும் விதமாக பேசுகிறார் பாரதீய ஜனதா குற்றச்சாட்டு
முதல்-அமைச்சர் நாராயணசாமி வன்முறையை தூண்டும் விதமாக பேசுகிறார் என்று பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி,
பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆளும் காங்கிரஸ் அரசின் ஊழலை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் 30 தொகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முதல்-அமைச்சர் நாராயணசாமி உண்மையை, ஊழலை மறைக்க வன்முறையை தூண்டும் விதமாக காங்கிரஸ் இளைஞர் அணியினரிடம் பாரதீய ஜனதாவின் போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும், அதற்கு பாதுகாப்பு நான் அளிக்கிறேன் என கூறியதை பாரதீய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
கல்வித்துறை கருத்தரங்கில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, புதுவைக்கு திருவண்ணாமலையில் இருந்து கஞ்சா வருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த உண்மை தெரிந்த அவர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததற்கான காரணம் என்ன?
இதற்கு முதல்-அமைச்சரே உடந்தையாக இருக்கிறாரோ? மத்திய அரசை குறைகூறுவதாக நினைத்து முதல்-அமைச்சரே தவறு செய்ய தூண்டும் விதமாக பேசுகிறார். பிரதமர் மோடியின் திட்டங்களாலும், செயல்களாலும் பாரதீய ஜனதா கட்சிக்கு மக்கள் ஆதரவாக உள்ளனர். தொண்டர்களின் எண்ணிக்கை கிளைகள்தோறும் அதிகரித்துள்ளது. எனவே உங்களின் மிரட்டலுக்கு பாரதீய ஜனதா பணியாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

Related Tags :
Next Story