ரே‌ஷன் கடைகளில் அதிகாரி ஆய்வு


ரே‌ஷன் கடைகளில் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 23 Feb 2020 2:45 AM IST (Updated: 22 Feb 2020 5:40 PM IST)
t-max-icont-min-icon

சேத்துப்பட்டு தாலுகாவில் ரே‌ஷன் கடைகளில் அதிகாரி ஆய்வு செய்தார்.

சேத்துப்பட்டு, 

சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள பெரியகொழப்பலூர், நரசிங்கபுரம். தேவிகாபுரம், தச்சம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டுறவு ரே‌ஷன் கடைகளில் சேத்துப்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் சுமதி நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது கடைகளில் அரிசி, சர்க்கரை, மைதா, துவரம்பருப்பு, எண்ணெய் ஆகியவற்றின் இருப்பு, கணக்கு பதிவேடு போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உணவு பொருள் வாங்க வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது உதவியாளர் ரவி, விற்பனையாளர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story